கடைசி உலகக் கோப்பை - லப்பர் பந்து பதிப்பு (பாகம் 1)
September 22, 2024
Warning: This story has a narrative which partially alludes to recently released movies - Kadaisi Ulaga Por and Lubber Pandhu. No direct spoilers. எச்சரிக்கை : இந்த கதையில் கடைசி உலக போர் மற்றும் லப்பர் பந்து திரைப்படங்களைக் குறிப்பிடும் கதை சொல்லாடல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. Disclaimer: All names and characters which appear in this story are fictional. பொறுப்புத் துறப்பு: இக்கதையில் இடம்பெறும் பெயர்கள் மற்றும் கதாப்பாத்திரங்கள் யாவும் கற்பனையே.
இந்தக் கதை 2011 இல் தொடங்குகிறது. மட்டைப்பந்து உலகக்கோப்பையில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இவ்விளையாட்டை இளைஞர்களிடையே எழுச்சி பெற வைத்தது. 10 ருபாய்க்கு விற்றுக்கொண்டு இருந்த ஸ்டும்பேர் லப்பர் பந்தை சிறுவர்களும் பெரியவர்களும் அதிகப்படியாக வாங்கி ஆறு ஓட்டங்கள் அடித்து பந்தைத் தொலைத்தனர். ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிது இல்லை என்றாலும், இப்படி தொலைக்கப்பட்டு மீட்கப்படாத அந்த லப்பர் பந்துகளால் உலகின் ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டது.